இடைக்கால வரவுசெலவுத் திட்டம் - 30 ஆம் திகதி சபையில் முன்வைப்பு

இந்த வருடத்தின் மீதமான நான்கு மாதங்களுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டம் இம்மாதம் 30 ஆம் திகதி நிதி, திட்டமிடல் அமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை மேற்படி இடைக்கால வரவுசெலவுத் திட்டம் தொடர்பில் அரசாங்கத்தின் செலவினம் உள்ளிட்ட 30 ஆம் இலக்க குறைநிரப்பு பிரேரணை கடந்த 9 ஆம் திகதி பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த குறைநிரப்பு பிரேரணையில் 3275 பில்லியன் ரூபா அரச செலவினமாகவும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஏனைய அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொடர்பிலும் அந்த குறைநிரப்பு பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை