எரிபொருள் விலை மாற்றம் தொடர்பில் வெளியான தகவல்

விலைச்சூத்திரத்தின்படி, எரிபொருளின் விலையில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் இருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எப்படியிருப்பினும் எரிபொருள் விலை ஒவ்வொரு மாதமும் முதலாம்  திகதி மற்றும் 15 ஆம் திகதிகளில் திருத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, நேற்று இரவு இந்த திருத்தத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை.

என்ற போதும் அது தொடர்பில் அமைச்சு எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
புதியது பழையவை