தீ விபத்தில் ஆசிரியை ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம், வடமராட்சி - பருத்தித்துறையில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த நிஷாந்தினி நித்திலவர்ணன் (வயது 43) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார்.

மேற்படி ஆசிரியை நேற்று இரவு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்தார் எனப் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
புதியது பழையவை