மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி- இராணுவ வீரர் உயிரிழப்பு.!

அம்பாறை உஹன பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட சமன பெத்த பிரிவேனா அருகே மோட்டார் சைக்கிள்  வீதியை  விட்டு விலகி உயர் மின்னழுத்த மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் இலங்கை இராணுவத்தின் முல்லைத்தீவு முகாமில் பணியாற்றும் இராணுவ வீரர் என்பதுடன் இலங்கை இராணுவத்தின் மின் மற்றும் இயந்திரவியல் பட்டாலியனைச் சேர்ந்த 22 வயதுடைய  ஆர்.எச். உதிக மலிந்த ரணசிங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த இராணுவ வீரர் விடுமுறையில் பொலன்னறுவைக்குச் சென்று பின்னர்  மஹியங்கனையில் உள்ள தனது பாட்டியைப் பார்த்துவிட்டு அம்பாறை பொல்வத்தைக்குத் செல்லும் வழியில் விபத்திற்குள்ளாகியுள்ளமை ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
புதியது பழையவை