உலகின் முதல் தமிழ் பேராசிரியர், முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 134 ஆவது ஜனன தின விழா நேற்று (27.03.2026) வெள்ளிக்கிழமை காலை, அவர் பிறந்த மண்ணான காரைதீவு சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த மணிமண்டபத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும், சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த பணிமன்றமும் இணைந்து நடத்திய இவ்விழா, பணிமன்றத் தலைவரும் பிரதிக் கல்விப் பணிப்பாளருமான சோதீஸ்வரன் ஸுரநுதன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் காரைதீவு கண்ணகை அம்மன் ஆலய பிரதம குரு சிவத்திரு கிருஷ்ண பிரியதர்ஷன் குருக்கள் திருமுன்னிலை வகித்தார்.
கௌரவ அதிதிகளாக காரைதீவு பிரதேச செயலாளர் ஜி.அருணன், தவிசாளர் சு.பாஸ்கரன், உதவி பிரதேச செயலாளர் பே.பிரணவரூபன், பிரதி கல்விப் பணிப்பாளர் ஆ.சஞ்சீவன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர்.
முக்கிய வெளியீடுகள் மற்றும் பங்களிப்புகள்
சுவாமிகளின் வரலாற்றை இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் நோக்கில் இரு முக்கிய பதாதைகள் இதன்போது திறந்து வைக்கப்பட்டன.
காரைதீவு நண்பர்கள் 86 O/L மற்றும் 89 A/L அணியினரால் அன்பளிப்பு செய்யப்பட்டது.
1969 நண்பர்கள் ஒன்றியத்தினால் வழங்கப்பட்டது.
மேலும், இசைக்கலைஞர் விபுலமணி இ.கோபாலசிங்கத்தின் "விபுலகானங்கள்" எனும் இசைத்தட்டு வெளியீடும் இதன்போது இடம்பெற்றது.
கலை நிகழ்வுகள் மற்றும் பாராட்டுக்கள்
விழாவின் ஒரு அங்கமாக, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், பாராட்டு விழாக்களும் சிறப்பாக இடம்பெற்றன. இதில் ஆலயத் தலைவர்கள், அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்வின் நிறைவாக, பணிமன்றச் செயலாளர் கு.ஜெயராஜ் நன்றியுரை ஆற்றினார்.