இரண்டு அரச பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - நால்வர் பலி, 40 பேர் காயம்.!

அம்பலாந்தோட்டை - கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில பகுதியில் இன்று (18.03.2026) மதியம் இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதோடு, 40 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

​இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் (இ.போ.ச) சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த பேருந்தும், திஸ்ஸமஹாராமயவிலிருந்து கராப்பிட்டிய நோக்கிப் பயணித்த பேருந்துமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

​விபத்தில் காயமடைந்த 40 பேரும் சிகிச்சைக்காக அருகில் உள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை