மட்டக்களப்பு - கொழும்பு சொகுசு பஸ் மோதி விபத்து.!மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் அதிசொகுசு பஸ் வண்டி, இன்று (12.04.2026) வெலிக்கந்தை பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

​இந்த கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், அவருடன் பயணித்த மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

​சம்பவம் குறித்து வெலிக்கந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
புதியது பழையவை