மட்டக்களப்பில் ‘காவியத்திரட்டு’ கும்மிப்பாடல் இறுவெட்டு வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.!

மட்டக்களப்பு, அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் சிவபத்தினியம்மன் புகழ்பாடும் காவியப்பாமாலை ‘கும்மிப்பாட்டுக்கள்’ அடங்கிய இறுவெட்டு வெளியீட்டு விழாவும், கௌரவிப்பு நிகழ்வும் அண்மையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.


ஆசிரியர்  இ.கோணேஸ்பரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சமூக ஆர்வலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ,போரதீவுப்பற்று பிரதேசசெயலாளர் சோ.ரங்கநாதன்,கலந்துகொண்டு சிறப்பித்ததோடு,மற்றும் போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளர் வி. மதிமேனன் அவர்களும் கௌரவ விருந்தினராக கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


கடந்த (01.05.2026)ஆம் திகதி  முற்பகல் 11.45 மணியளவில் காந்திபுரம் சிவபத்தினி அம்மன் ஆலய மண்டபத்தில் இவ்விழா இடம்பெற்றது.

இதன்போது, பாரம்பரிய கும்மிப்பாடல்கள் அடங்கிய இறுவெட்டு உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டதுடன்.

கலை மற்றும் இலக்கியப் பணி புரிந்தோர் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வு குறித்து கருத்துத் தெரிவித்த பிரதம அதிதிகள்
​"எமது ஆன்மீகப் பாரம்பரியத்தையும், தமிழ் இலக்கிய மரபையும் உயர்த்திப்பிடிக்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக இவ்விழா அமைகிறது.

இத்தகைய கலைப்பணிகள் எமது சமூகத்தின் ஒற்றுமையையும், பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்திச் செல்ல பேருதவியாக இருக்கும். இதுபோன்ற நற்பணிகள் தொடர வாழ்த்துக்கள்," எனத் தெரிவித்தார்.

​மண்ணின் கலையையும் ஆன்மீகத்தையும் போற்றும் வகையில் அமைந்த இவ்விழா, அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
புதியது பழையவை