கிழக்கு மாகாண அபிவிருத்தித் திட்டங்களை துரிதப்படுத்துமாறு ஆளுநர் அறிவுறுத்தல்!

​கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில், கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தின் மாதாந்த முன்னேற்ற ஆய்வுக் கூட்டம் நேற்று(12.05.2026) திருகோணமலையிலுள்ள முதலமைச்சர் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

​கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காக அரச நிதியுதவியுடன் முதலமைச்சர் செயலகத்தின் கீழுள்ள பல்வேறு நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் முன்னேற்றம் குறித்து இதன்போது விரிவாக விவாதிக்கப்பட்டது.

​குறிப்பாக, திணைக்களங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களை ஆளுநர் நேரடியாக மீளாய்வு செய்துடன், 
​ஆளுநரின் பணிப்புரையின் கீழ்
​நடைபெற்று வரும் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் எவ்வித தாமதமுமின்றி, உரிய காலப்பகுதிக்குள் நிறைவு செய்யுமாறு சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் தலைவர்களுக்கு ஆளுநர் இதன்போது கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கினார். 

மக்கள் நலன் கருதி முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டங்களின் நன்மைகள் உரிய நேரத்தில் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

​இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர், முதலமைச்சர் அமைச்சின் செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் தலைவர்கள், உயரதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

புதியது பழையவை