போரதீவுப்பற்றில் விபத்து - வயல் காணிக்குள் கைவிடப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள்!

​மட்டக்களப்பு பழுகாமம் - தும்பங்கேணி பிரதான வீதியில் நேற்று (21.05.2026)நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் ஒன்று, இன்று(22.05.2026) காலை வரை வயல் காணிக்குள் கைவிடப்பட்ட நிலையில் கிடப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

​இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது.


​நேற்று இரவு காந்திபுரம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இப்பாதையினூடாக மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது, வீதியில் நின்ற மாடு ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் படுகாயமடைந்த இளைஞரை, அவ்வழியால் சென்ற பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் வண்டி மூலம் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


​இந்நிலையில், விபத்து நடந்து பல மணித்தியாலங்கள் கடந்த போதிலும், விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் இன்று காலையும் அப்பகுதியில் உள்ள வயல் காணி ஒன்றுக்குள் கைவிடப்பட்ட நிலையிலேயே கிடக்கின்றது.

​இவ்விபத்துச் சம்பவம் தொடர்பாக இதுவரை காவல்துறைக்கு (போலீசாருக்கு) உத்தியோகபூர்வமாக எந்தவொரு தகவலும் வழங்கப்படவில்லை எனவும், இதனால் வாகனம் இன்னும் மீட்கப்படாமல் உள்ளதாகவும் விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
புதியது பழையவை