சம்மாந்துறையில் கோர விபத்து.!ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.!

​அம்பாறை மாவட்டம்
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இரண்டு கெப் (Cab) ரக வாகனங்கள் நேருக்கு நேர் மோதி இன்று (25.05.2026)மாலை இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி, ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.


​சம்மாந்துறை - கிளிவெட்டி சந்திப் பகுதியில் இந்த விபத்துச் சம்பவம் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது.

​இவ்விபத்தில் மல்வத்தை 01 பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபர் ஒருவரே ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

​அதிவேகமாக பயணித்த இரு வாகனங்களும் கட்டுப்பாட்டை இழந்து ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோதலின் வீரியத்தினால் வாகனங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.

​விபத்தில் படுகாயமடைந்த ஏனைய இருவர், அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு சம்மாந்துறை மற்றும் மல்வத்தை ஆகிய வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து நிகழ்ந்ததற்கான பிரதான காரணம் மற்றும் மேலதிக விபரங்கள் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
புதியது பழையவை