இறுதிப் போரில் பணியாற்றிய வைத்திய அதிகாரி வரதராஜா!

வன்னியில் இறுதிப் போரில் மக்களுடன் இறுதிவரை நின்று பணியாற்றிய திருகோணமலை தம்பலகாமத்தை சேர்ந்த வைத்தியர் த. வரதராஜா கடுமையான உடல் நிலைப்பாதிப்புக்கு உள்ளாகிய நிலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புலம்பெயர்ந்து கனடாவின் ரொறொன்டோவில் வசித்துவரும் வைத்தியர் வரதராஜா சில நாட்களுக்கு முன்னர் கடுமையான இருதயப் பிரச்சினைக்கு உள்ளாகியுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரைக் காப்பாற்றும் முயற்சியில் வைத்தியர்கள் தீவிரமாக ஈடுபட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தன்னுடைய கணவர்,

கடுமையான இருதயப் பிரச்சினையால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்காக பிரார்த்திக்குமாறும் அவருடைய மனைவி முகநூல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இறுதிப்போரில் வாகரையிலும் பின்னர் வன்னியிலும் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய வைத்தியர் வரதாஜா மே மாதம் 15 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் கிழக்கில் தாக்குதல் சம்பவம் ஒன்றில் படுகாயம் அடைந்திருத்தார். 

பின்னர் இராணுவக் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட போது காயமடைந்த நிலையிலேயே இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

யுத்த காலத்தில் 
ஈச்சலம்பற்று மற்றும் வாகரை வைத்தியசாலை களில் பணியாற்றி ய
இவர் கிழக்கு மாகாணம், விடுவிக்கபட்ட பின் வன்னிக்கு சென்றார்.

பின்னர் விடுதலையாகி புலம்பெயர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை