மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டும் விநியோக நிகழ்வு!

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு,(26.06.2026)ஆம் திகதி  போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில் விசேட துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வு களுவாஞ்சிக்குடி பொதுச் சந்தைப் பகுதியில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

​குருமண்வெளி பொது நூலகமும், களுவாஞ்சிக்குடி பொது நூலகமும் இணைந்து ஏற்பாடு செய்த இந் நிகழ்வானது, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் அவர்களின் தலைமையில் நடாத்தப்பட்டது.

​இதன்போது, பொதுமக்களுக்கும் வர்த்தகர்களுக்கும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், பொது இடங்கள் மற்றும் வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டன.

​இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைச் செயலாளர் எஸ். யோகநாதன், நூலக உத்தியோகத்தர்களான சீ. ரவீந்திரன், திருமதி லக்ஷ்மி ரவீந்திரன், திருமதி மோபிதா கவிதாஸ், மற்றும் பொது சுகாதார பரிசோதகர், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வாசகர் வட்டத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
புதியது பழையவை