சட்டவிரோத மணல் கடத்தல்காரர்களைக் கைது செய்யச் சென்றபோது, மகாவலி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு மாயமான விசேட அதிரடிப்படை (STF) வீரர் இன்று (13) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று (ஜூலை 13) அதிகாலை, கிண்ணியா முடுக்குத்தெட்டி, மணலாறு துறையினூடாக மகாவலி ஆற்றைக் கடந்து சட்டவிரோத மணல் கடத்தல் குழுவை வளைத்துப்பிடிக்க STF வீரர்கள் முயன்றனர்.
இதன்போது பலத்த நீரோட்டம் காரணமாக குறித்த அதிகாரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.
கடற்படையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று காலை முதல் மேற்கொண்ட தீவிர தேடுதல் வேட்டையின் பலனாக, சேருநுவர, திட்டன்தெட்டி மணல் துறை பகுதியில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கடமையின் போது உயிரிழந்த விசேட அதிரடிப்படை வீரரின் மறைவு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து சேருநுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.