மாணிக்க கங்கையில் தீர்த்தோற்சவம்- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் கதிர்காமத் திருவிழா நிறைவு!

வரலாற்றுச் சிறப்புமிக்க புனித கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடி வேல் விழா, இன்று (30.07.2026) காலை மாணிக்க கங்கையில் இடம்பெற்ற தீர்த்தோற்சவ நிகழ்வுடன் இனிதே நிறைவு பெற்றது.

​ஆலயத்தின் இறுதி நாளாகிய இன்று நடைபெற்ற தீர்த்தோற்சவ நிகழ்வில், இலங்கை முழுவதிலும் இருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். 

மாணிக்க கங்கையில் புனித நீராடிய பக்தர்கள், "அரோகரா... அரோகரா..." என எழுப்பிய பக்தி கோஷம் விண்ணைப் பிளந்தது.

​கடந்த பல நாட்களாகக் கோலாகலமாக நடைபெற்று வந்த இந்த ஆடித் திருவிழா, ஆன்மீக பரவசத்துடனும் பக்தர்களின் பேரன்புடனும், அமைதியான முறையில் இனிதாக நிறைவடைந்துள்ளது.
புதியது பழையவை