மட்டக்களப்பு மாவட்டம், கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முனைக்காடு பொது மயானத்தில் கைவிடப்பட்டிருந்த கைக்குண்டு ஒன்று நேற்று வியாழக்கிழமை (02.07.2026)ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மயானத்திற்குச் சென்றிருந்த நபர் ஒருவர், அங்கு கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட கைக்குண்டை அவதானித்து உடனடியாக பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.
தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த கொக்கட்டிச்சோலை பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டதுடன், குண்டுகளை செயலிழக்கச் செய்யும் விசேட அதிரடிப்படையினருக்கும் (STF) இது குறித்து அவசர அறிவித்தலை வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற அனுமதியைப் பெற்று இன்று வெள்ளிக்கிழமை (03.07.2026) குறித்த கைக்குண்டை பாதுகாப்பான முறையில் செயலிழக்கச் செய்வதற்கான தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.