இன்றைய வானிலை முன்னறிவிப்பு.!

கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலனறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும்  பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும். 

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.

வடக்கு, வடமத்திய  மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் இரத்தினபுரி, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை   மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி  பலத்த காற்று வீசக் கூடும்.

கடல் பிராந்தியங்களில்  


சிலாபம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில்  மணித்தியாலத்திற்கு 30 - 40 km வேகத்தில் தென் மேற்குத் திசையில்  இருந்து காற்று வீசும். 

கல்பிட்டி தொடக்கம் மன்னார், காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான அத்துடன் ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு  50 - 60 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள்  கொந்தளிப்பாகக் காணப்படும்.  

திருகோணமலை தொடக்கம் முல்லைத்தீவு வரையான அத்துடன் கல்பிட்டி தொடக்கம் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 km இலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

கல்பிட்டி தொடக்கம் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது 2.0 - 2.5 m உயரத்திற்கு மேலெளக்கூடும்.

சிரேஸ்ட  வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான
மொஹமட் சாலிஹீன்.
புதியது பழையவை