வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

​வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலின் இந்த ஆண்டுக்கான (2026) வருடாந்த மகோற்சவப் பெருவிழா இன்று (17.08.2026) ஆம் திகதி பக்திபூர்வமாக கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. 

இன்று முதல் தொடர்ந்து செப்டம்பர் மாதம் வரை 25 நாட்கள் விசேட திருவிழாக்கள் நடைபெறவுள்ள நிலையில், யாழ்ப்பாண நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.  

​இன்று (17.08.2026)ஆம் திகதி காலை 8.15 மணியளவில் விசேட வசந்த மண்டபப் பூஜைகள் இடம்பெற்றன. 
அதனைத் தொடர்ந்து காலை 10.00 மணிக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷங்களுக்கு மத்தியில் கொடியேற்ற நிகழ்வு மிகச் சிறப்பாக இடம் பெற்றன.

​இந்த ஆரம்ப நிகழ்வில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்திருந்த பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டு நல்லூர் கந்தனை வழிபட்டு அருளாசி பெற்றனர். 

எதிர்வரும் திருவிழா நாட்களில் உள்நாட்டுப் பக்தர்கள் மட்டுமன்றி, புலம்பெயர் தேசங்களிலிருந்தும் பெருமளவிலான பக்தர்கள் சுவாமியைத் தரிசிப்பதற்காக நாட்டுக்கு வருகை தரவுள்ளனர்.  

​நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் நடைபெற்று வரும் இதே காலப்பகுதியில், வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய மகோற்சவப் பெருவிழாவும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை